அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க பேரவையில் தீர்மானம்!

அனைத்து மாநிலங்களுடனும் பேசி, ஒத்து கருத்து ஏற்பட்ட பின்னரே அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.

Tamil Nadu news today live updates
Tamil Nadu news today live updates

மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் என சட்டப்பேரவையில் முதல்வர் பழனிச்சாமி தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.

சமீபத்தில் மத்திய அரசு அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்நிலையில் சட்டப்பேரவையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தில், அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னரே அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் எனவும் தீர்மானத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தமிழகம் பராமரித்து வரும் முல்லை பெரியார் அணை மீதான உரிமை நீங்கிவிடும். இதனால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த மசோதா மீதான விவாதம் நடந்தது. அப்போது சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேசிய ராமசாமி ஆகியோர் மசோதாவை வரவேற்று பேசினர். இதையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Resolution on assembly to stop dam safety bill

Next Story
Madras University Results 2018: தொழில் நுட்ப காரணத்தால் சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியாவது தாமதமாகிறது!Madras University results 2018 LIVE Updates : சென்னை பல்கலைகழக தேர்வு முடிவுகள் 2018
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com