மலைபகுதிகளில் ரிசார்ட்; பேராபத்து ஏற்படும்: வனப் பாதுகாவலர் திருநாவுக்கரசு பேச்சு

இயற்கையான சமநிலையை பராமரிப்பதற்காக இனங்கள், பல்லுயிர் பகுதிகள், மரபணு வளங்கள் ஆகியவற்றை அழியாமல் பாதுகாப்பது மிக அவசியம் என்று கோவையில் நடைபெற்ற மேற்கு தொடர்ச்சி மலை பகுதி பல்லுயிர் பராமரிப்பு மற்றும் சூழலமைப்பு மேலாண்மை கருத்தரங்கில் வன அதிகாரிகள் கூறினர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
resort covai

கோவையில் மேற்கு மலைத்தொடர்ச்சி சார்ந்த வனப்பகுதிகளில் பல்லுயிர் பராமரிப்பு மற்றும் சூழலமைப்பு மேலாண்மை குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் கோவை கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

இயற்கையான சமநிலையை பராமரிப்பதற்காக இனங்கள், பல்லுயிர் பகுதிகள், மரபணு வளங்கள் ஆகியவற்றை அழியாமல் பாதுகாப்பது  மிக அவசியம் என்று கோவையில் நடைபெற்ற மேற்கு தொடர்ச்சி மலை பகுதி  பல்லுயிர் பராமரிப்பு மற்றும் சூழலமைப்பு மேலாண்மை கருத்தரங்கில் வன அதிகாரிகள் கூறினர்.

Advertisment

கோவையில் மேற்கு மலைத்தொடர்ச்சி சார்ந்த வனப்பகுதிகளில் பல்லுயிர் பராமரிப்பு மற்றும் சூழலமைப்பு மேலாண்மை குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் கோவை கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

விலங்கியல் மற்றும் வன உயிரியல் ஆராய்ச்சி துறை மற்றும் கல்கத்தா இந்திய  விலங்கியல் கணக்கெடுப்பு ஆகியோர் இணைந்து நடத்திய இதில், கல்லூரியின் செயலர் முனைவர் வாசுகி பேசினார்.

அப்போது பேசிய அவர்,இந்திய அளவில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி இயற்கை வளங்கள் அதிகம் நிறைந்த பகுதியாக இருப்பதாக கூறிய அவர்,இதில் வன பகுதி  ஆக்ரமிப்புகளால் மனித விலங்குகள் மோதல் அதிகம் ஏற்படுவதாக தெரிவித்தார்.

Advertisment
Advertisements

தற்போது இரயிலில் அடிபட்டு  யானை உயிரிழப்புகளை தடுக்க   செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் நல்ல உதவியாக இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

கருத்தரங்கில் பல்லுயிர் பராமரிப்பு மற்றும் சூழல் அமைப்பு மேலாண்மை குறித்து கேரளா,மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு என பல்வேறு மாநிலங்களை சேர்ந்த   வனத்துறை அதிகாரிகள் பேசினர்.

இதில், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வனம் மற்றும் காலநிலை மாற்றம், தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் முதல்வர் திருநாவுக்கரசு பேசுகையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில்  உள்ள விலங்குகள், தாவரங்கள், நுண்ணுயிரிகள் போன்ற அனைத்து உயிரினங்களின் பன்முகத்தன்மையையும், அவற்றின் வாழ்விடங்களையும் பாதுகாப்பது குறித்து தொடர்ந்து பேசி வருவதாக குறிப்பிட்ட அவர், இயற்கையான சமநிலையை பராமரிப்பதற்காக இனங்கள், பல்லுயிர் பகுதிகள், மரபணு வளங்கள் ஆகியவற்றை அழியாமல் பாதுகாப்பது  மிக அவசியம் என தெரிவித்தார்.

சுற்றுலா என்ற பெயரில் இயற்கை சார்ந்த வன பகுதிகளில் சூழல் சீர்கேடுகள் அதிகரித்து  வருவதாக சுட்டிகாட்டிய அவர்,ரிசார்ட்ஸ் எனப்படும் தங்கும் விடுதிகள் அளவுக்கு அதிகமாக மலைபகுதிகளில்   அமைக்கப்படுவதால் வயநாடு போன்ற பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவிற்கு காரணம் என்றார்…

வனபகுதிகளில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்வியல் தரத்தை உயர்த்தினால் இதற்கு தீர்வு கிடைக்கும் என தெரிவித்தார்.

வனங்களில் உள்ள வளங்கள் அழிவதற்கு அன்னிய களைச்செடிகளின் ஆக்ரமிப்பு  ஒரு காரணம் என சுட்டி காட்டிய அவர்,களைச்செடிகளை அழிப்பதற்கு  அரசு தனியாக  நிதி   ஒதுக்க வேண்டும் என வேண்டு கோள் விடுத்தார்.

பல்லுயிர் பராமரிப்பு,இயற்கை சூழல் பாதுகாப்பில்  ஆராய்ச்சியாளர்கள், இயற்கை ஆர்வலர்கள், வன பாதுகாவலர்கள், கவனம் செலுத்துவதை போன்று பொதுமக்களும் இயற்கை பாதுகாப்பை உணர்ந்து செயல்பட்டாமல் மட்டுமே நமது மேற்கு தொடர்ச்சி மலை இயற்கை வளங்களை பாதுகாக்க முடியும் என அவர் கூறினார்.

செய்தி: பி.ரஹ்மான்

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: