scorecardresearch

ஆடு மீது இருசக்கர வாகனத்தை மோதிய விவகாரம்: துப்பாக்கியை காட்டி மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர் கைது

திருச்சி அருகே ஆட்டின் மீது இருசக்கர வாகனத்தை மோதி காயம் ஏற்படுத்திவிட்டு துப்பாக்கியை காட்டி மிரட்டல் விடுத்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆடு மீது இருசக்கர வாகனத்தை மோதிய விவகாரம்: துப்பாக்கியை காட்டி மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கே. உடையாபட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி ஜெயசீலா ஊரில் ஆடு மேய்த்து விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த போது அதே ஊரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஜான் பிரிட்டோ என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்தபோது ஜெயசீலாவின் ஆட்டின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. ஆட்டுக்கு காயம் ஏற்பட்டதால் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது.

இந்த சூழலில் ஜான் பிரிட்டோ தான் வைத்திருந்த இந்திய அரசு உரிமம் பெற்ற கை துப்பாக்கியை காட்டி ராஜ்குமார், அவரது மனைவி ஜெயசீலா, ராஜ்குமாரின் அண்ணன் மனைவி பிரியங்கா ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ராஜ்குமார் மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் போலீசார் ஜான் பிரிட்டோ மீது கொலை மிரட்டல், ஆயுதங்களை வைத்து மிரட்டல் உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த கை துப்பாக்கி, 2 தோட்டாக்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஜான் பிரிட்டோ 2001-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிந்து கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பணி ஓய்வு பெற்றுள்ளார். ஓய்வு பெற்ற நிலையில் மொண்டிப்பட்டி காகித ஆலையில் பணிபுரிந்து வந்துள்ளார்.

செய்தி: க.சண்முகவடிவேல்

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Retired army personnel arrested in trichy for threatening man with pistol