ஓய்வு பெற்ற ஜ.ஜியும், ஐபிஎஸ் அதிகாரியுமான சிவனாண்டி சம்மந்தப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுஜை ஆனந்த, சைலஜா ரெட்டி, சுப்பிரமணியன் ஆகிய மூவரும், தாங்கள் நிறுவனத்தில் 25 சதவிகித பங்குகளை தருவதாக கூறி பாண்டியராஜ் என்பவரிடம் 50 லட்சம் மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்தது.
இந்த பணத்தை திருப்பி கேட்ட பாண்டியராஜனை சுஜை ஆனந்த உள்ளிட்டோர் மிரட்டியுள்ளனர்.
இது தொடர்பாக பாண்டியராஜன் அளித்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜரான பாண்டியராஜனை 10 பேர் கொண்ட கும்பல் கடத்த முயன்ற போது, அவர்களிடம் இருந்து தப்பி வேப்பேரி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த பாண்டியராஜ், சுஜை ஆனந்த் உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக அளித்த புகாரை வாபஸ் பெற வேண்டும் என ஐபிஎஸ் அதிகாரி சிவனாண்டி நிர்பந்தப்படுத்தியதாகவும் தெரிவித்தது. அது தொடர்பாக வேப்பேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு முன் ஜாமீன் வழங்க கோரி 70 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விடுமுறை தினத்தன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டை முற்றுக்கையிட்டு ரகளையில் ஈடுபட்டனர்.
இது சம்மந்தமாக சென்னை பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபட்டது. இந்த மூன்று வழக்குகளையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதில் 50 லட்சம் மோசடி தொடர்பான வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி சிபிசிஐடி போலீஸார் சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யபட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாண்டியராஜ் சம்மந்தப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.என் பிரகாஷ், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், சாட்சிகளின் வாக்கு மூலங்களை பார்க்கும் போது மோசடி வழக்கை திரும்ப பெற மனுதாரருக்கு ஐபிஎஸ் அதிகாரி சிவனாண்டி அழுத்தம் கொடுத்துள்ளார் என்பது தெரிகின்றது. மேலும் தலைமை நீதிபதி வீட்டின் முன்பு ரகளையில் ஈடுபட்ட வழக்கறிஞரிடம் சிவனாண்டி தெடர்ந்து செல்போனில் பேசியுள்ளார் என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன. எனவே இந்த வழக்கை சிபிஐ மாற்றி உத்தரவிட்டார். மேலும் தலைமை நீதிபதி வீட்டை முற்றுக்கையிட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை கண்காணிக்க சிறிப்பு அமர்வு அமைப்பது தொடர்பாக இந்த உத்தரவை தலைமை நீதிபதியின் பார்வைக்கு எடுத்துச் செல்ல உயர்நீதிமன்ற பதிவுத்துறைக்கு நீதிபதி பிரகாஷ் உத்தரவிட்டார்.