Advertisment

நீட் தேர்ச்சி பெற்ற 61 வயது ஆசிரியர்: அரசுப் பள்ளி மாணவருக்காக டாக்டர் கனவை தியாகம் செய்கிறார்

நீட் தேர்வு எழுதி 61 வயதிலும் தனது மருத்துவர் கனவை துறத்திப் பிடித்து கைகூடினாலும், அதை ஒரு அரசுப் பள்ளி மாணவருக்காக விட்டுக்கொடுத்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கே. சிவப்பிரகாசத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
retired school teacher sacrifice doctor dream, retired school teacher Neet pass, retired school teacher Sivapirakasham, நீட் தேர்ச்சி பெற்ற 61 வயது ஆசிரியர், ஓய்வுபெற்ற ஆசிரியர், அரசுப் பள்ளி மாணவருக்காக டாக்டர் கனவை தியாகம் செய்த ஆசிரியர், எம்பிபிஎஸ், MBBS, mbbs counselling

அனைவருக்குமே சிறு வயதில் இருந்தே ஒரு லட்சியம் இருக்கும். அந்த லட்சியம் நிறைவேறாதபோது கனவாகிறது. வாழ்நாளில் எப்படியாவது அந்த கனவை நிஜமாக்கிவிட வேண்டும் என்று முயற்சிப்பார்கள். அப்படி, கனவு நிஜமாகி கைகூடி வந்தாலும் நடைமுறையைக் கருத்தில் கொண்டு மற்றவர்களுக்காக தியாகம் செய்வார்கள். அப்படி, சிறிய வயதில் இருந்து மருத்துவர் ஆக வேண்டும் என்று லட்சியத்துடன் இருந்த ஆசிரியர் ஒருவர், அப்போது தான் மருத்துவர் ஆக முடியவில்லை. ஆனால், தற்போது, ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், நீட் தேர்வு எழுதி மருத்துவராவதற்கான வாய்ப்பு வந்தபோதும் ஓய்வு பெற்ற ஆசிரியர் கே.சிப்பிரகாசம் தனது மருத்துவர் கனவை மாணவர்களுக்காக விட்டுகொடுத்துள்ளார்.

Advertisment

நீட் தேர்வு பலருடைய மருத்துவராகும் லட்சியத்தை கைகூடா கனவாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான மருத்துவக் கலந்தாய்வு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதனிடையே, கடந்த ஆண்டு, நீட் தேர்வு எழுதி எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்வதற்கான வயது உச்ச வரம்பை உச்ச நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டது. இதனால், நீட் தேர்வு எழுத விருப்பமுள்ள பல்வேறு வயதினரும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வெழுதினர்.

அந்த வகையில், நீட் தேர்வு எழுதிய தருமபுரியைச் சேர்ந்த 61 வயதான ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் சிவப்பிரகாசத்துக்கு மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய ஓய்வு பெற்ற ஆசிரியர் கே. சிவப்பிரகாசம் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்வதற்கு தகுதி பெற்றார். இன்று அவர் தனது மாணவர் ஒருவருடன் கலந்தாய்வில் பங்கேற்கிறார்.

ஓய்வு பெற்ற ஆசிரியர் கே.சிவப்பிரகாசம், நீட் தேர்வில் வெற்றி பெற்று, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படுகிற 437 இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 349வது இடத்தைப் பிடித்துள்ளார். சிறிய வயதில் இருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை அடையும் ஆசிரியர் சிவப்பிரகாசம் கலந்தாய்வில் பங்கேற்பதா வேண்டாமா? இரட்டை மனநிலையில் இருப்பதாக ஊடகங்களில் தெரிவித்துள்ளார். இதற்கு காரணம், நடைமுறை வாழ்க்கையில் யோசிக்கும்போது, தான் ஒரு ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். தனக்கு கிடைக்கும் மருத்துவர் இடம் ஒரு அரசுப் பள்ளி மாணவனுக்கு கிடைத்தால் இன்னும் பலனுடையதாக இருக்கும் என்று தனது மருத்துவர் விட்டுக்கொடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக தனது மருத்துவர் கனவை விட்டுக்கொடுக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவப்பிரகாசம் இது தொடர்பாக கூறியதாவது: “சிறுவயதில் மருத்துவராக வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. ஆனால், அப்போது வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆசிரியராகி ஓய்வு பெற்றுள்ளேன். ஆனாலும், மருத்துவராக வேண்டும் என்ற தாகம் அப்படியே இருந்தது. நீட் தேர்வு எழுதி எம்.பி.பி.எஸ் சேர்வதற்கான வயது வரம்பை உச்ச நீதிமன்றம் நீக்கியதால் தேர்வெழுதி வெற்றி பெற்றேன். இப்போது, கலந்தாய்வில் தரவரிசைப் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

மருத்துவர் கனவை விட்டுகொடுப்பது குறித்து அவர் கூறியதாவது: “கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் பயற்சி மருத்துவராக உள்ள எனது மகன், இந்த வயதில் நான் மருத்துவம் படிப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால், எனது வயதில் மருத்துவம் படித்து முடித்து அதிகபட்சமாக15 ஆண்டுகள் வரை மருத்துவ சேவை செய்ய வாய்ப்பு உள்ளது. நான் கலந்தாய்வில் பங்கேற்காவிட்டால் அந்த மருத்துவ இடம் ஒரு இளம் அரசுப் பள்ளி மாணவருக்கு கிடைக்கும். அதன் மூலம் அந்த மாணவர் 40-50 ஆண்டுகள் வரை மருத்துவ சேவை செய்ய முடியும் என்று சுட்டிக் காட்டினாா்.

ஆனாலும், மருத்துவக் கலந்தாய்வுக்கு எனது மாணவா் ஒருவருடன் சென்னைக்கு வருகிறேன். ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியராக, ஒரு அரசுப் பள்ளி மாணவனின் மருத்துவ இடத்தைத் தட்டிப் பறிக்க நான் விரும்பவில்லை. நான் கலந்தாய்வில் பங்கேற்காமல் இருக்கும்பட்சத்தில், இளைஞருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது என்ற மகிழ்ச்சியில் வீட்டுக்குச் செல்வேன். அதே நேரம், கலந்தாய்வு நடைமுறைகளை அறிந்து கொண்டு, எனது மாணவா்களுக்கு வழிகாட்டுவேன்.” என்று கூறுகிறார்.

தனது சிறு வயது மருத்துவர் கனவு ஓய்வு பெற்ற வயதிலும் நிறைவேற்ற முடியும் என்றாலும், சிவப்பிரகாசம், தனது மருத்துவர் கனவை, ஒரு அரசுப் பள்ளி மாணவருக்காக விட்டுக் கொடுத்து தனது மருத்துவர் கனவை தியாகம் செய்துள்ளார். கலந்தாய்வுக்கு வந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் கே. சிவப்பிரகாசம், மருத்துவப் படிப்புக்கான இடத்தை தேர்வு செய்ய விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு எழுதி 61 வயதிலும் தனது மருத்துவர் கனவை துறத்திப் பிடித்து கைகூடினாலும், ஒரு அரசுப் பள்ளி மாணவருக்காக தனது கனவை தியாகம் செய்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கே. சிவப்பிரகாசத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Mbbs Counselling
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment