ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிபில் உள்ள வனத்துறையால் சொல்லப்படும் காட்டு ராஜா 60 வயது எட்டியதால் ஓய்வு - வனத்துறை சார்பாக கும்கி கலீம்க்கு மரியாதை செலுத்தப்பட்டது.
ஆனைமலை புலிகள் காப்பகம் உலர்ந்தி வனச்சரகம் டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாம்மில் வனத்துறையினரால் 26 யானைகள் பராமரிக்கபட்டு வருகிறது.
இதில் கும்கி கலீம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா , கேரளா மற்றும் பிற மாநிலங்களுக்கு சென்று காட்டுயானைகளை விரட்டும் பணிகளுக்கு கலீம் சென்று உள்ளது.
100 முறை சென்ற கலீம் ஒருமுறை கூட தோற்றது இல்லை . கடந்த சில வருடங்களுக்கு முன்பு பொள்ளாச்சி வனப் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அரிசி ராஜாவை பிடித்து வனத்துறையினருக்கு பெருமை பெற்று தந்தது.
மேலும் தமிழ்நாட்டின் மக்களின் அடையாளமான கலீம்க்கு 60 வயது எட்டியதால் அதற்கு வனத்துறையினர் நேற்று முதல் ஓய்வு அளித்துள்ளனர். மேலும் கலீம்மால் பிடித்துக் கொண்டு வரப்பட்ட சின்னத்தம்பி,அரிசி ராஜா என்கிற முத்து தற்பொழுது கும்கியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக வனத்துறை இணைச்செயலாளர் திருமதி.சுப்ரியா சாஹூ ஐ.ஏ.எஸ்., வன உயிரின பாதுகாவலர்,சீனிவாசரெட்டி, வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியம், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் திருச்சி
உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் என் வேட்டை தடுப்பு காவலர்கள் கலந்து கொண்டனர்.
பி.ரஹ்மான், கோவை மாவட்டம்.