சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ( ஓ. வி .சி) ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் மாணவர்களிடையே பல்வேறு பிரச்சனைகள் நிலவி வருகின்றது.
இதனை தடுக்க மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவின் பேரில் மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார் தலைமையில் வருவாய் துறையினர் பள்ளிக்கு வந்த மாணவர்களிடம் அவர்கள் கொண்டு வந்த பைகளை சோதனையிட்டனர்.
செல்போன் மற்றும் போதைப் பொருட்கள் இருக்கிறதா? என்றும் இதே போல் தலைமுடியை சரியாக வெட்டாத மாணவர்களை பெற்றோர்களை வரவழைத்து அவர்களை அனுப்பிவிட்டு தலை முடியை சரியாக வெட்ட சொல்லி அறிவுறுத்தியும் அனுப்பினர்.
சில மாணவர்களிடம் தாசில்தார் கிருஷ்ணகுமார் சொந்த பணத்தை கொடுத்து தலைமுடியை சரி செய்து வர திருப்பி அனுப்பினார். கையில் பல்வேறு நிறத்தில் கயிறு கட்டி இருந்தால் அங்கேயே கயிறுகளை வெட்டிவிட்டு பள்ளிக்குள் அனுமதித்தனர்.
தொடர்ந்து மூன்றாவது நாளாக வருவாய்த் துறையினர் பள்ளியின் வெளியே நின்று கொண்டு மாணவர்களை சோதனையிட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“