சாலை விதிகளை மீறும் ஓட்டுனர்களுக்கு அபராத தொகை அதிகரித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி இன்று முதல் அபராதம் வசூலிக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின்படி, சாலை விதிமீறல் மற்றும் வாகன விதி மீறல் தொடர்பான தண்டனைகள் மற்றும் அபராதத் தொகை அதிகரித்துள்ளது.
இதற்கான அரசாணை சமீபத்திய நாட்களில் வெளியானதையொட்டி, புதிய வாகன சட்டத்திருத்தம் வருகின்ற அக்டோபர் 28ஆம் தேதியில் இருந்து அமல்படுத்தப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் ஷங்கர் ஜிவால் அறிவித்திருந்தார்.
ஆனால், நேற்று இரவு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பின் படி, ''வாகன விதிமீறல் தொடர்பான புதிய அபராதத் தொகை இன்று (26-ந்தேதி) முதல் வசூலிக்கப்படும்'' என்று குறிப்பிட்டுள்ளது.
எனவே, வாகன ஓட்டிகள் போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil