தனியார் பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை இலவச கல்வி கற்பதற்காக இதுவரை 84 ஆயிரம் பேர் பதிவு செய்திருப்பதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களை சேர்ந்த ஏழை குழுந்தைகள், தனியார் பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை கற்பதற்கான கல்விக்கட்டணங்களை, இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ், மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏற்றுக்கொள்கின்றன.
1 லட்சத்து 40 ஆயிரம் இடங்களுக்கான ஆன்லைன் பதிவு, கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி துவங்கியது. இதுவரை 84 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆன்லைன் பதிவிற்கான கடைசி நாள் வரும் 18ம் தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
How to get free admission in private schools: இலவச அட்மிஷன் பெறும் முறை
குழந்தையின் பிறப்பு சான்றிதழ், குழந்தையின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்., குழந்தையின் பிறப்பு சான்றிதழ்., குழந்தையின் ஆதார் அட்டை., குழந்தையின் சாதி சான்றிதழ், தந்தையின் வருமான சான்றிதழ்., தந்தை மற்றும் தாய் ஆதார் அட்டை., குழந்தையின் இருப்பிட சான்றிதழ். இந்த ஆவணங்களை கொண்டு http://tnmatricschools.com/rte/rtehome.aspx , http://www.dge.tn.gov.in/ இணையதளங்களுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். குழந்தைகளின் பெற்றோர்கள், தங்கள் இல்லத்தில் இருந்து சுமார் 1KM முதல் 3KM வரை உள்ள பள்ளிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.