/tamil-ie/media/media_files/uploads/2020/06/a104-1.jpg)
rishivandiyam mla vasantham karthikeyan, mla vasantham karthikeyan, mla vasantham karthikeyan corona, ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ, வசந்தம் கார்த்திகேயன், கொரோனா, chennai news, tamil nadu news, tamil news, latest tamil news
Rishivandiyam MLA Vasantham Karthikeyan: ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மிகவேகமாக அதிகரித்து வருகிறது. பொதுமக்களைக் கடந்து களப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களையும் கொரோனா பாதிப்பு தாக்கி வருகிறது. அதேபோல, சட்டமன்ற உறுப்பினர்களும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
கடத்தல்காரர்கள் தவற விட்டார்களா? சென்னை மீனவர்கள் வலையில் சிக்கிய ரூ100 கோடி போதைப் பொருள்
சேப்பாக்கம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், கோயம்புத்தூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த 13-ம் தேதி வசந்தம் கார்த்திகேயனின் மனைவி மற்றும் மகள் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு பெரம்பலூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.