சமூக வலைதளங்களில் திமுக.வுக்கு மும்முரமாக இயங்கும் செளம்யன் வைத்யநாதன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து வெளியிட்டிருக்கும் பதிவு இது... திமுக.வின் பார்வையாக இதை எடுத்துக் கொள்ளலாமோ?
இதோ அவரது பார்வை...
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் மீண்டும் அறிவிக்கப்பட்டவுடன்...
திமுக தனது வேட்பாளர் யார் என்பதை உடனே முறைப்படி மீண்டும் அறிவித்து களமிறங்கி விட்டது. தினகரன் கூட தான் தான் வேட்பாளர் என்று அறிவித்து விட்டார்...!
ஆனால் ரெட்டையிலை கிடைத்தால் ஆகாசத்தை வளைப்போம், பூமியை பிளப்போம் என்றெல்லாம் உதார் விட்ட ஆளும் அதிமுக இதுவரையிலும் தனது வேட்பாளரை அறிவிக்காமல் பம்மிக் கொண்டிருக்கிறது...! இதற்கெல்லாம் சூத்திரதாரி என்று சொல்லிக்கொண்டு, கழகங்களை கருவறுப்போம் என்று கிளம்பியுள்ள பாஜக, தனது வேட்பாளராக எந்த பிரபலத்தை சிக்க வைத்து பிராப்ளம் ஆக்கலாம் என்று இன்னமும் தேடிக் கொண்டு தான் இருக்கிறது...!
ஆக மொத்தம் போட்டி, திமுகவுக்கும் தினகரனுக்கும் இடையில் தான் இருக்கும் என்று தெரிகிறது...! மூன்றாமிடத்திற்கு ரெட்டையிலை கட்சிக்கும், பாஜகவுக்கும் கடும் போட்டி நிலவலாம்...! சீமான் வழக்கம் போல நோட்டாவுடன் கடுமையாக போட்டி போட்டு இந்த முறையும் நோட்டாவுக்கு அடுத்த இடத்தைத் தான் பிடிப்பார்...!
தொகுதியிலுள்ள பாமகவினர், தங்கள் கைக்காசுக்கு வில்லங்கம் வைக்காமல் தப்பிக்க வைத்த டாக்டர் ஐயாவை... என் ச்செல்லாக்குட்டி என்று அவர் கன்னத்தைக் கிள்ளி குதூகலத்துடன், வேட்டியை மடித்துக்கட்டி ரிலாக்ஸாடாக உலா வர ஆரம்பித்துவிட்டனர்..!
விசிக்களும், இந்திய கம்யூனிஸ்ட்டுகளும் எதிர்கால நல்வாழ்வுக்கு தங்கள் தலைவர்கள் அச்சாரமிட்டுவிட்டார்கள் என்ற குதூகலத்தில் இதயம் இனிக்க, கண்கள் பனித்தவாறே தங்கள் தலைவர்களைப் பார்த்து விட்டு, தொகுதி திமுக செயல்வீரர்களைப் போய்ப்பார்த்து, பார்க்க வைத்து களமிறங்கிவிட்டார்கள்...!
தேமுதிகவினர், இதற்குமேலும் இங்கிருந்தால் எதிர்காலமில்லை என்று எண்ணி லோக்கல் திமுக பிரபலங்களைப் பிடித்து, வாட் ஈஸ் த ப்ரொஸீஜர் டு கெட் டி எம் கே மெம்பர்ஷிப் கார்ட்... என்று கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள்...! பூணூல் கம்யூனிஸ்ட் காரர்கள் ஆர் எஸ் எஸ் உத்தரவுக்காக குத்தவைத்து காத்திருக்கின்றார்கள்...!
வைக்கோவோ கடந்த கால தேர்தல் அனுபவ அன்பளிப்புகள் மனதில் நிழலாட ஏக்கத்துடன் ஜெயலலிதா சமாதியை சபலத்துடன் பார்த்துக்கொண்டு நிற்கின்றார்...!
ஆக.. ஆர்.கே. நகர்... திமுகவுடன் கரம் கோர்த்து ஆகச்சிறந்த நகராக மாறுமா... அல்லது அன்றைய தேவையை மட்டும் பூர்த்தி செய்து கொண்டு அழுக்கடைந்த நகராகவே தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...!