ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் 7ம் தேதி நடத்தை ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். அப்போது கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக மருதுகணேஷ் போட்டியிடுகிறார். தி.மு.க. வேட்பாளருக்கு காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி. தமிழ் மாநில தேசிய லீக். பார்வர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
மனுதாக்கல் செய்த நாள் முதல் மருதுகணேஷ் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். அவருடன் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 7-ந் தேதி முதல் பிரசாரத்தை தொடங்க உள்ளார். அன்றைய தினம் ஆர்.கே. நகரில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடக்கிறது. கூட்டணி கட்சியினருக்கு இதில் மருது கணேசை அறிமுகப்படுத்தி மு.க.ஸ்டாலின் பேசுகிறார். அன்றைய கூட்டத்துக்கு திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து கட்சி தலைவர்களையும் அழைக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
அதைத் தொடர்ந்து பிரசாரம் தீவிரம் அடைகிறது. மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் வீதி வீதியாக சென்று பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.