scorecardresearch

தமிழக ஆளுநர், அண்ணாமலை தனித்தனியாக டெல்லி பயணம் : இதுதான் காரணமா?  

ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனித்தனியாக இன்று டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனர்.

டெல்லி பயணம்

ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை  தனித்தனியாக இன்று டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ஆன்லைன் ரம்மி தடை மசோதா சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றம் செய்யப்பட்டது. அதிமுக கூட்டணி தொடர்பாக பரபரப்பான கருத்தை அண்ணாமலை கூறியிருந்தார். டெல்லிக்கு பயணம் செய்யும் பாஜக தலைவர்  அண்ணாமலை உள்துறை அமைச்சர் அமித்ஷா,  பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை அண்ணாமலை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.  வருகின்ற மார்ச் 26-ம் தேதி பிரதமரை சந்திக்க அண்ணாமலை நேரம் கேட்டிருந்த நிலையில் முன்கூட்டியே அவர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க  விரும்பவில்லை என நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசியிருந்தார். கூட்டணி குறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என பின்னர் விளக்கம் அளித்திருந்த நிலையில் அண்ணாமலை திடீர் என்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஆளுநர் 10 மணி விமானத்தில் டெல்லி சென்ற நிலையில்  11 மணி விமானத்தில்  அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி செல்லும்ஆளுநர் நாளை  மீண்டும் சென்னை திரும்புவார். இந்நிலையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து அமைச்சர்களிடம் விவாதிப்பார் என்று கூறப்படுகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Rn ravi and k annamalai travel to delhi