கள்ளச் சாராயம் குடித்ததால் ஏற்பட்ட மரணங்களுக்கு தமிழக அரசிடம் இருந்து ஆளுநர் அறிக்கை கேட்டதற்கு, முரசொலி நாளிதழ் அவரை விமர்சித்துள்ளது.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் கள்ளச் சாராயம் குடித்து 20 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு 50 ஆயிரம் வங்கியது தமிழக அரசு. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசிடம் அறிக்கை கேட்டிருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் முரசோலி, ஆளுநரை கடுமையாக விமர்சித்துள்ளது. ” கள்ளச் சாராய உயிரிழப்பில் ஆளுநர் ரவியும் விளம்பர வெளிச்சம் தேட முற்பட்டுள்ளார். ஆளுநர் அறிக்கை கேட்டது தவறில்லை.
விளக்கம் கேட்டதை அறிக்கையாக வெளியிட்டது, அவரது நெஞ்சில் எவ்வளவு வஞ்சகம் உள்ளது என்பதை உணர்த்துகிறது. ஆளுநரின் சில கேள்விகள் அவரது அரசியல் தெளிவற்ற தன்மையின் மொத்த வெளிப்பாடு” என்று முரசொலியில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஆளுநர் ரவிக்கு விளம்பர வெளிச்சத்தில் இருக்க நினைத்தால், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அண்ணாமலை போல ஒரு மாநிலத்திற்கு தலைவராகலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஆளுநருக்கான பதவியை செய்யாமல் அதை, சீரழிக்கும் வேலையை தொடர்ந்து செய்வதை நிறுத்துவது, நாட்டுக்கு நல்லது எனவும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“