தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கைதுசெய்தது.
தற்போது அவர் உடல் நலக்குறைவு காரணமாக காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் மவைி தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவருகிறது.
இதற்கிடையில் ஆளுனர் ஆர்.என். ரவி செந்தில் பாலாஜியை தகுதி நீக்கம் செய்தார். பின்னர் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலையீட்டின் பேரில் இந்த தகுதி நீக்கம் நிறுத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆளுனர் ஆர்.என். ரவி டெல்லியில் இன்று தலைமை வழக்கறிஞர் ஆர். வெட்கட்ரமணியை சந்தித்துப் பேசினார்.
அப்போது செந்தில் பாலாஜி தகுதி நீக்கம், சட்ட சிக்கல்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“