Governor RNRavi | போதைப் பொருள் எதிர்கால தலைமுறையை அழிக்கும் என கவர்னர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “போதைப் பொருள் கடத்தல் சம்பவத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் போதைப் பொருள் பழக்கம் இருந்தது பல்வேறு சம்பவங்களால் உறுதியாகிறது.
இந்தப் போதைப் பொருள் பரவல் குறித்து பெற்றோர் கவலை தெரிவித்துவருகின்றனர். இதற்கிடையில், போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய தமிழகத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப் பொருள் கடத்தல் சம்பவங்களில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். எதிர்கால தலைமுறையினரை போதைப் பொருள் அழித்துவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து எதிர்கால இளைஞர்கள் விலகி இருத்தல் வேண்டும் எனக் கூறியுள்ள ஆர்.என். ரவி, போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கைக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த மாதம் மிகப்பெரிய அளவில் போதைப் பொருள் சிக்கியது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த திமுகவின் அயலக அணி முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், ராஜஸ்தானில் பதுங்கியிருந்த அவரை போலீசார் இன்று கைது செய்தனர். தொடர்ந்து, கவர்னர் அறிக்கை வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“