scorecardresearch

குடியரசு தின விழா: தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர்

குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர். என் .ரவி சென்னை உழைப்பாளர் சிலை அருகே தேசிய கொடி ஏற்றினார்.

குடியரசு தின விழா: தேசியக் கொடியை ஏற்றினார் ஆளுநர்

குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர். என் .ரவி சென்னை உழைப்பாளர் சிலை அருகே தேசிய கொடி ஏற்றினார்.

நாட்டின்  74 வது குடியசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. குடியரசு தலைவர் திரெளபதி முர்மு டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார். சென்னை காமராஜர் சாலையில் ஆளுநர் ஆர். என் . ரவி  குடியரசு தின விழாவில் மூவர்ண்ண கொடி ஏற்றினார். எல்லா வருடமும் காந்தி சிலைக்கு  முன்பாக ஆளுநர் தேசிய கொடி ஏற்றுவார். ஆனால் மெட்ரோ பணி நடைபெற்று வருவதால், உழைப்பாளர் சிலை  அருகில் கொடி ஏற்றினார்.

பாதுகாப்பு பணியில் 6,800 போலிசர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். ஆளுநர் தனது மனைவியுடன் விழாவில் பங்கேற்றார். மேலும் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்ற்கொண்டார். இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Rn ravi tamilnadu host flag on republlic 582739day