/tamil-ie/media/media_files/uploads/2017/07/suicide-75911.jpg)
Road accident near salem sankari
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சின்னகவுண்டணூர் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் இன்று அதிகாலை மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சேலத்திலிருந்து ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் விபத்து. தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதியதில், ஓட்டுநர் விக்னேஷ் மற்றும் பிரியா என்பவர் பலத்த காயமடைந்த நிலையில், செல்வராஜ், மஞ்சுளா, ஆறுமுகம், பழனிசாமி, பாப்பாத்தி மற்றும் 1 வயது குழந்தை சஞ்சனா உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் வசதிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
கொண்டலாம்பட்டியில் இருந்து பெருந்துறைக்கு சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் விபத்து தொடர்பாக சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.