Advertisment

விபத்துகளின் போது ரத்தத்தில் மது அளவு சோதனை கட்டாயம்: அமலுக்கு வந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு

விபத்துகளின் போது ரத்தத்தில் மது அளவு சோதனை கட்டாயம்: அமலுக்கு வந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு

author-image
WebDesk
New Update
kerala, blood cancer, HIV, Blood Transfusion, chemotherapy
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விபத்து வழக்குகளில் இழப்பீட்டுத் தொகை நிர்ணயிப்பதை தீர்மானிக்க முடியாத சூழல் உள்ளதாகவும், அதனால் ரத்தத்தில் மதுவின் அளவை கண்டறிவதை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் கூறியிருந்தார்.

Advertisment

தமிழ்நாட்டில் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் போது அவர்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்வது கட்டாயம் என அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மது அருந்தியுள்ளார்களா என்பதை கண்டறியும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் உத்தரவையடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். சாலை விபத்து மற்றும் இழப்பீடு தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், வழக்கு அறிக்கையில் சாலை விபத்தில் சிக்கியவர் மீது மது வாசனை வீசியதாக கூறிய போதிலும், அதன் அளவை குறிப்பிடவில்லை 

 ஓட்டுநரின் ரத்தத்தில் ஆல்கஹால் அளவு அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டியிருந்தால் மட்டுமே கவனக்குறைவாக இருக்க முடியும் என நீதிபதி கருத்து தெரிவித்தார். 

மேலும், பல சமயங்களில் வாகன விபத்துகளில் சிக்கி மருத்துவமனை அழைத்து வரப்படும் நபர்களுக்கு ரத்தத்தில் ஆல்கஹால் அளவை மருத்துவர்கள் பரிசோதிக்கத் தவறிவிடுகின்றனர்.  இதனால் விபத்தில் காயமடைபவர்களுக்கு உரிய இழப்பீட்டை தீர்மானிக்க முடியாத நிலை உள்ளது எனத் தெரிவித்தார். தொடர்ந்து இதுகுறித்து உத்தரவு பிறக்கபிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார். 

இந்தநிலையில், சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற மருத்துவமனை வருபவர்கக்கு ரத்த பரிசோதனை கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment