கோவையில் பல இடங்களில் மேம்பாலப் பணிகள் சாலை விரிவாக்க பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே இன்று கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டதால் பள்ளிகளுக்கு அருகே உள்ள மேம்பால பணிகள், சாலை விரிவாக்க பணிகள் நடுவே போக்குவரத்து அதிகமாக ஏற்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருந்தனர். போக்குவரத்து போலீசார் எவ்வளவு தான் முயன்றாலும் முயற்சிகள் அனைத்துமே தோல்வி பெற்ற நிலையில் போக்குவரத்து நெரிசல் இருந்தது.
அடுத்ததாக வரும் நாட்களில் கல்லூரியில் திறந்து விட்டால் காலை, மாலை நேர போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும். எனவே கூடுதல் காவல்துறையினரை நியமனம் செய்து நெரிசலை தவிர்க்க வாகன ஓட்டிகள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“