/indian-express-tamil/media/media_files/2025/09/25/human-chain-coimbatore-campaign-2025-09-25-14-19-13.jpg)
"நான் உயிர் காவலன்" திட்டத்தின் மூலம் அக்டோபர் 6-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை பல்வேறு வகையிலான நிகழ்ச்சிகள் மூலம் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை கோவை மாநகர் முழுவதும் அதிக அளவிலான மக்களிடம் எடுத்து சென்று விபத்தில்லா கோவை சாத்தியம் என்பதை எடுத்துக்காட்ட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்தார்.
கோவை அவிநாசி சாலை அண்ணா சிலை அருகில் இருந்து விமான நிலையம் வரை நடைபெற்ற உயிர் அமைப்பின் சார்பில் நடத்தப்படும் சாலை பாதுகாப்பு குறித்து மனித சங்கிலி நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தொடங்கி வைத்து கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் காவல்துறை உயர் அதிகாரிகள்,கல்லூரி மாணவர்கள்,என்சிசி மாணவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கூறியதாவது:
அவினாசி சாலையில் அண்ணா சிலை முதல் கோவை விமான நிலைய சிக்னல் வரை 10 கி.மீ., பாலக்காடு சாலையில் குனியமுத்தூர் முதல் கோவைப்புதூர் பிரிவு வரை 5 கி.மீ.,பொள்ளாச்சி சாலையில் ரத்தினம் கல்லூரி முதல் மாலுமிச்சம்பட்டி வரை 4.5 கி.மீ., மற்றும் ரேஸ் கோர்ஸ் பகுதியில் காஸ்மோபாலிட்டன் கிளப் முதல் அரசு கலைக் கல்லூரி வரை 0.5 கி.மீ. என இந்த 4 பகுதிகளில் கைகோர்த்து சங்கிலியாக நின்றுள்ளனர் என்று கூறினார்.
மேலும், "நான் உயிர் காவலன்" திட்டத்தின் மூலம் அக்டோபர் 6-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை பல்வேறு வகையிலான நிகழ்ச்சிகள் மூலம் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை கோவை மாநகர் முழுவதும் அதிக அளவிலான மக்களிடம் எடுத்து சென்று விபத்தில்லா கோவை சாத்தியம் என்பதை எடுத்துக்காட்ட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்தார்.
மேலும், கோவை சர்க்கார் சாமகுளம் பகுதியில் தனியார் ஹோமில் குழந்தை ஒருவரை தாக்கும் வீடியோ வெளியானது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆட்சியர், “காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினர் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் சட்ட ரீதியாக அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
பூ மார்க்கெட் வீடியோ விவகாரம் குறித்த கேள்விக்கு, “காவல்துறையினர் புகார் பெற்று விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.
‘யு டர்ன்’ (U-Turn) -ஆல் ஏற்படும் பாதிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த மாவட்ட ஆட்சியர், “யு டர்ன்’ சம்பந்தமாக மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் விரைவில் இதற்கு தீர்வு காணப்படும்” என தெரிவித்தார்.
அதே போல. சொகுசு கார்களுக்கு வாகன அபராதம் விதிக்காமல் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருவது குறித்த கேள்விக்கு, காவல் துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு இனி நடவடிக்கை எடுப்பார்கள் என கூறினார்.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.