கோவையில் சாலையோர மரம் தண்ணீர் லாரி மீது விழுந்து ஏற்பட்ட விபத்தில், லாரி சேதம் அடைந்தது. ஓட்டுநர் மற்றும் கிளினர் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
கோவையில் புதன்கிழமை மாலை பரவலாக மழை பொழிந்தது. தண்ணீர் தேங்கியதால் நகரின் பல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனிடையே கோவை கே.ஜி தியேட்டர் பஸ் ஸ்டாப்பில் உள்ள பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. சாலையில் சென்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது விழுந்தது. இதில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சிக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மரக்கிளைகளை அடுத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை பத்திரமாக மீட்டனர்.
சிறு காயங்களுடன் மீட்கப்பட்ட இருவரும் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“