சிவகங்கையில் ஆய்வு மேற்கொண்ட பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, சாலை கட்டுமானப் பணிகளில் முறைகேடுகள் நடந்தால் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், முறைகேடு கண்டறியப்பட்டால் அவர்களது முன்பணம் அபராதமாக வசூலிக்கப்படும் என்று எச்சரித்தார்
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரி தமிழக அரசு வலியுறுத்தியும், மத்திய அரசு பல்வேறு காரணங்களைக் கூறி மறுத்து வருகிறது. மேலும், சாலை விரிவாக்கத்தின்போது அகற்றப்படும் ஒரு மரத்திற்குப் பதிலாக 10 மரக்கன்றுகள் நட ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பத்திரிகை மற்றும் ஊடகச் செய்தியாளர்களுக்கு சுங்கச்சாவடிகளில் இலவச பயண அனுமதி அட்டை வழங்க மத்திய அரசுக்குக் கடிதம் எழுதப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.