சென்னை, தி. நகர் பகுதியில் இயங்கி வரும் பிரபல ஜவுளிக் கடையான குமரன் சில்க்ஸில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, தி. நகரில் ஏராளமான ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் போன்றவை செயல்பட்டு வருகின்றன. இவை மட்டுமின்றி நடைபாதையிலும் நிறைய கடைகள் உள்ளன. இதனால் தி. நகர் பகுதியில் பெரும்பாலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.
இதே பகுதியில் குமரன் சில்க்ஸ் ஜவுளிக் கடையும் நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இக்கடையில் இருந்து ரூ. 9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, குமரன் சில்க்ஸ் ஜவுளிக் கடையின் நான்காவது மாடியில் உள்ள மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், ரூ. 9 லட்சத்தை திருடிச் சென்றதாக போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து பார்த்ததில் இச்சம்பவத்தில் மூன்று பேர் ஈடுபட்டிருந்ததாக தெரிகிறது. அதன்பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரபல துணிக்கடையில் லட்சக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.