சென்னை சாலிகிராமம் எல்.வி பிரசாத் சாலையை சேர்ந்தவர் தேவ் ஆனந்த்(29). இவர் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தின் நேர்முக உதவியாளராக உள்ளார்.
இவர் சில தினங்களுக்கு முன்பு, வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் தர்மபுரிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு, வீடு திரும்பிய ஆனந்த, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டிற்கு உள்ளே சென்று பார்க்கையில், பீரோ மற்றும் மேஜைகள் உடைக்கப்பட்டு, பூஜை அறையில் இருந்த 500கிராம் வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்துள்ளது. அதன் மதிப்பு, சுமார் ரூ34 ஆயிரம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது
இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் துறைக்கு தகவல் அளித்தார். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகள் தேடி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil