Advertisment

குறைந்த வெளிச்சத்தால் அதிகரிக்கும் கொள்ளை சம்பவம்! கே.கே நகரில் பதற்றம்!!!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
snatching

கே.கே. நகரில் குறைந்த மின் விளக்கு வெளிச்சம் இருப்பதால் மாலை நேரங்களில் கொள்ளை சம்வங்கள் அதிகரித்துள்ளதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Advertisment

சென்னை அஷோக் நகர் அடுத்த கே.கே. நகர் பகுதியின் வீதிகளில் மின் விளக்குகள் குறைந்த சக்தியுடன் வேலைப்பார்ப்பதால் மாலை நேரங்களில் பெரும்பாலான வீதிகளில் குறைந்த வெளிச்சம் இருக்கிறது. மேலும் சில வீதிகளில் புதிய மின் விளக்குகள் இன்னும் பொருத்தப்படவில்லை. இதனால் மாலை நேரங்களில் மக்கள் நடமாட அச்சம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர். குறிப்பாக இந்த சந்தர்பத்தைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் கைவரிசை காட்டுவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

கே.கே. நகர் பகுதிகளில் மாலை நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் வரும் கொள்ளையர்கள், சாலையில் நடந்து செல்பவர்களிடம் இருந்து செல்போன், செயின் மற்றும் ஹாண்ட்பேக் ஆகியவற்றைப் பறித்து செல்கின்றனர். இதன் சாட்சியாக சமீபத்தில் 42 வயதான நந்தகுமார் என்பவரின் செல்போனை கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். மேலும் அதே பகுதியில் உள்ள ஷண்முக சாலையில் பெண் ஒருவர் மளிகைக் கடையில் இருந்து திரும்பிச் சென்றுகொண்டிருந்தார். அப்போது பைக்கில் மின்னல் வேகத்தில் வந்த கொள்ளையர்கள் அவர் கழுத்தில் இருந்த செயினை அறுத்துச் சென்றனர்.

கொள்ளையில் ஈடுபட்டவர்கள் இரு சக்கர வாகனத்தில் வருவதால் அடையாளம் காணவும், துரத்திப் பிடிக்கவும் இயலவில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து காவல்துறையிடம் கேட்டபோது, “இந்தக் கொள்ளையை சம்பவ இடத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உணருவதற்குள்ளேயே, கொள்ளையர்கள் தப்பித்து செல்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களால் குறைந்த வெளிச்சத்தால் அவர்களை அடையாளம் காட்டவும் முடியவில்லை. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது வீதிகளின் மின் விளக்குகள் சீராக இல்லாதது தான். கே.கே. நகர் பகுதிகளில் அதிக மரங்கள் இருப்பதால் பகலிலும் சில பகுதிகள் இருட்டாக இருக்கும்.” என்கின்றனர்.

அஷோக் நகரின் முக்கிய பகுதிகளில் விளக்குகள் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் ராஜன் சாலை, சிவன் பூங்கா மற்றும் அண்ணா சாலை முனைப்பு பகுதிகளில் தெரு விளக்குகள் எதுவும் இயங்கவில்லை. எனவே இப்பகுதி மக்கள் மாலை நேரத்தில் வெளியே வருவதற்குத் தயங்குகின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து மாநகராட்சி அலுவலக அதிகாரிகள் கூறுகையில், “இந்த பிராஜெக்டுகளில் பல்வேறு ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு முறையான வருமானம் அளிப்பதில் கடினம் உள்ளது. அதனால் மின் விளக்கு வேலைகள் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.” என்று கூறுகின்றனர். இவர்கள் அளித்த இந்த விளக்கத்தை மக்கள் ஏற்க மறுக்கின்றனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment