நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மரணம்; சோகத்தில் மூழ்கிய தமிழ் திரையுலகம்

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் சென்னையில் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது46. ரோபோ சங்கரின் மரணம் தமிழ் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் சென்னையில் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது46. ரோபோ சங்கரின் மரணம் தமிழ் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Robo Shankar passes

நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு நடிகர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகத்தினர் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் சென்னையில் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது46. ரோபோ சங்கரின் மரணம் தமிழ் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு கமல்ஹாசன் எம்.பி, உள்ளிட்ட நடிகர்கள், தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisment

கலக்கப்போவது யாரு, அது இது எது உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்சிகளின் மூலம் நகைச்சுவை கலைஞராக அறியப்பட்ட, அதனது அபாரமான நகைச்சுவை நடிப்பால் தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான  தனுஷ் உடன் மரி படத்திலும், சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் படத்திலும், விஷ்ணு விஷால் உடன் வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில்ம் நடித்துள்ளார். விஜயின் புலி, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல், ரோபோ சங்கர் தனது தனித்துவமான நடிப்பாலும் அபாரமான நகைச்சுவையாலும் ரசிகர்களை ஈர்த்தார். இந்த சூழலில்தான், சில மாதங்களுக்கு முன்னர், ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு ஓரளவு மீண்டு வந்தார். 

இந்நிலையில், ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில் பங்கேற்றார். அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை படக்குழுவினர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Advertisment
Advertisements

ரோபோ சங்கரை பரிசோதித்த மருத்துவர்கள் நீர்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து சில தினங்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தியதன் பேரில் ரோபோ சங்கர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார்.

இந்நிலையில், வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மறைவு குறித்து அறிந்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ரோபோ சங்கர் சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறி மீண்டும் படங்களில் நடித்து வந்த நிலையில் உயிரிழந்தார். ரோபோ சங்கரின் உடல் இன்றிரவு அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு, இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

நகைச்சுவைக் கலைஞராக அனைவரையும் சிரிக்க வைத்த ரோபோ சங்கரின் மறைவு,தமிழ் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு கமல்ஹாசன் எம்.பி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

‘மக்களை மகிழ்வித்தவர்’ நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு மு.க. ஸ்டாலின் இரங்கல்

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். “ரோபோ சங்கர் மறைவெய்திய செய்தி அறிந்து வருத்தமுற்றேன்; மேடை துவங்கி சின்னத்திரை, வண்ணத்திரை என விரிந்து மக்களை மகிழ்வித்தவர் ரோபோ சங்கர், ரோபோ சங்கரை இழந்து வாடும் குடும்பத்துக்கும் கலையுலகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்” என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் எம்.பி, நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், “ரோபோ சங்கர் ரோபோ 
புனைப்பெயர் தான், 
என் அகராதியில் நீ மனிதன் 
ஆதலால் என் தம்பி
போதலால் மட்டும் எனை விட்டு 
நீங்கி விடுவாயா நீ? 
உன் வேலை நீ போனாய் 
என் வேலை தங்கிவிட்டேன். 
நாளையை எமக்கென நீ விட்டுச்
சென்றதால் 
நாளை நமதே.” என்று பதிவிட்டுள்ளார். 

Robo Shankar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: