திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள அந்தநல்லூர் காவிரி ஆற்றின் கரையில் கடந்த மாதம் 30ஆம் தேதி ராக்கெட் லாஞ்சர் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
அது குறித்து போலீசார் விசாரணை செய்ததில் அது கொரியப் போரின்போது அமெரிக்க ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டது என்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அந்த ராக்கெட் லாஞ்சரை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்க செய்தனர்.
அது எப்படி அந்தநல்லூர் பகுதிக்கு வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று அதே பகுதியில் காவேரி ஆற்றின் கரையில் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது காவிரி ஆற்றில் ராக்கெட் லாஞ்சர் ஒன்று மிதந்து வந்துள்ளது.
இது குறித்து அங்கிருந்தவர்கள் ஜீயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ராக்கெட் லாஞ்சரை பத்திரமாக மீட்டு அதனை பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர்.
அதே நேரம், திருச்சி காவிரியில் அடுத்தடுத்து கண்டெடுக்கப்படும் ராக்கெட் லாஞ்சர் விவகாரம் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்ற போதும் திருச்சியில் ராக்கெட் லாஞ்சர் இரண்டாவது முறையாக கைப்பற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“