Advertisment

தூத்துக்குடியில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம்; தமிழக அரசு நிலம் வழங்க ஒப்புதல் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Rocket launching Station in Tuticorin: தூத்துக்குடியில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு தமிழக அரசு நிலம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News Today Live Updates

Tamil Nadu News Today Live Updates

Rocket launching Station in Tuticorin: தூத்துக்குடியில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு தமிழக அரசு நிலம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Advertisment

மதுரை மாவட்டத்தில் ஜெயலலிதா பேரமை மற்றும் அம்மா அறக்கட்டளை மூலமாக பல்வேறு தரப்பினருக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 5வது ஆண்டு நிறைவு விழா மற்றும் சங்கத்தின் முன்னாள் தலைவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டார். பின்னர், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியை மதுரை வேலம்மாள் கல்லூரில் தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உயதகுமார், “மாணவர்கள் மன தைரியம் மற்றும் நம்பிக்கையுடன் பொதுத்தேர்வை எதிர்கொள்வதற்கும், போட்டித்தேர்வுகளை சந்திப்பதற்கும் வேலைவாய்ப்பை பெறுவதற்கும் இது போன்ற திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அவருக்கு உதவும். ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து விவசாயியான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக உயர்ந்துள்ளார். அவர்மாணவர்களின் நலனில் அக்கறையுடன் பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அதுமட்டுமில்லாமல், முதலமைச்சர் பழனிசாமி தூத்துக்குடியில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் அமைவதற்கு நிலம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளார். அதர்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார்.” என்று  கூறினார்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் இந்த தகவல் மூலம் தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ளதை அறிந்து தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Tuticorin Minister R B Udayakumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment