பனங்காட்டுப் படை என்ற கட்சியை தொடங்கி நடத்திவருபவர் ராக்கெட் ராஜா. இவர் வழக்கு ஒன்றில் ஆஜராக திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்துக்கு வந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “சட்டமன்ற தேர்தலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நிலைப்பாட்டில் உள்ளேன்” என்றார்.
தொடர்ந்துப் பேசிய அவர், “தனது கட்சி யாருக்கும் ஆதரவு அளிக்காது என்றார். மேலும், “வழக்கு ஒன்றில் ஆஜராக வந்துள்ளேன். இந்த வழக்கை சட்டத்தின் மூலம் சந்தித்து வருகிறேன்.
வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இலக்கு நிர்ணயித்துள்ளேன். அதன்படி ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடுவேன்” என்றார்.
ராக்கெட் ராஜா வருகையையொட்டி நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 2021 சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளத்தில் பனங்காட்டுப் படை வேட்பாளர் ஹரி நாடார் மூன்றாம் இடம் பிடித்தார்.
இவர் வாங்கிய வாக்குகள் திமுக வேட்பாளரின் தோால்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“