Advertisment

ராக்கெட் ராஜா அதிரடி கைது; பரபரப்பு பின்னணி..!

ராக்கெட் ராஜா மீது 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

author-image
WebDesk
Oct 07, 2022 16:46 IST
Rocket raja arrested in Trivandrum airport

பனங்காட்டு படை நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா

திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ராக்கெட் ராஜா மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் கொலை வழக்கு ஒன்றில் ராக்கெட் ராஜாவை போலீசார் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

Advertisment

.3திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள மஞ்சங்குளத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி சாமி துரை என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்த நிலையில், பனங்காட்டு படை கட்சியின் நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜாவை போலீசார் இன்று (அக்.7) திருவனந்தபுரத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

ராக்கெட் ராஜாவை போலீசார் விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராக்கெட் ராஜா மீது திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

இவர் அண்மையில் பனங்காட்டு படை என்ற கட்சியை தொடங்கி நடத்திவந்தார். இவரின் சொந்த ஊர் திசையன்விளை அருகில் உள்ள ஆனைகுடி ஆகும்.

எனினும் இவர் பெரும்பாலும் மும்பையில்தான் வசித்துவந்தார். இன்றும் மும்பை செல்ல முயன்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே தொடர்ச்சியாக கொலை சம்பவங்கள் கடந்த காலங்களில் நிகழ்ந்து வந்தன. ராக்கெட் ராஜா மீது 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ராக்கெட் ராஜாவை நெல்லை போலீசார் நாங்குநேரி அழைத்துச் சென்று விசாரிக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment