fines for Rohini Cinemas: நடப்பாண்டு பொங்கல் தினத்தில் தல அஜித் குமாரின் துணிவு திரைப்படமும், தளபதி விஜய்யின் வாரிசு திரைபடமும் ஒன்றாக வெளியானது.
இந்தப் படங்களுக்கு 4 காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு காட்சி கூடுதலாக திரையிடப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தில் ரோகிணி திரையரங்குக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக ரோகிணி திரையரங்கம் தரப்பில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரோகிணி திரையரங்குக்கு விதிக்க அபராதம் செல்லும் என உத்தரவிட்டது. பொங்கல் பண்டிகையின்போது சிறப்பு காட்சியின் போது துணிவு பட கொண்டாட்டத்தில் ரசிகர் ஒருவர் உயிரிழந்தார்.
இதையடுத்து அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்துக்கும் சிறப்பு காட்சிகள் அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது விஜய் நடிப்பில் வெளியாக உள்ள லியோ படத்துக்கு சிறப்பு காட்சிகள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“