scorecardresearch

பாளையங்கோட்டை ஸ்டேடியம்; கட்டி முடித்து 8 மாதங்களில் இடிந்த மேற்கூரை: காண்ட்ராக்டருக்கு நோட்டீஸ்

பாளையங்கோட்டை வஉசி மைதானத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தை தொடர்ந்து, பொறியியல் வல்லுநர்கள் குழு நேரில் ஆய்வு நடத்தினர்.

voc ground

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வ.வு.சி. மைதானத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட பார்வையாளர் அரங்கின் மேற்கூரை அடைந்து விழுந்ததின் தொடர்பாக, அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

பாளையங்கோட்டையில் ரூ.14.95 கோடிக்கு கட்டப்பட்ட வ.வு.சி. மைதானத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டது.

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, இந்த கட்டடங்கள் திறக்கப்பட்டது. நேற்றைய தினம் பெய்த காற்றழுத்த கனமழையினால், ஒரு பார்வையாளர் மாடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

இதைத்தொடர்ந்து, இந்த கட்டுமானம் தரமற்ற முறையில் கட்டப்பட்டதாக அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

பல்வேறு கட்சியினர் புகார் அளித்த நிலையில், சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்டிருக்க கூடிய பொறியியல் வல்லுநர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Roof collapse incident at palayankottai voc ground smart city officials inspection