டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா-சிக்கா ஜோடியாக கைது

ஆபாசமாக பேசி அவதூறு செய்த வழக்கில் டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யாவும் அவருடைய நண்பர் சிக்காவும் ஜோடியாக கைது செய்யப்பட்டுள்ளது சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Tik Tok fame Rowdy Baby Surya arrested, Rowdy Baby Surya arrested, Rowdy Baby Surya - Sikka arrested, டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா-சிக்கா ஜோடியாக கைது, டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா கைது, ரவுடி பேபி சூர்யா கைது, ரவுடி பேபி சூர்யா, Rowdy Baby Surya, Rowdy Baby Surya and her friend Sikkanthar arrested, Rowdy Baby Surya arrested in Madurai

ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் மதுரையை சேர்ந்தவ டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யாவை போலீசார் செவ்வாய்க்கிழமை அதிரடியாக கைது செய்துள்ளனர். அவருடன், அவது நண்பர் சிக்கா என்கிற டிக்கந்தரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

ரவுடி பேபி என்கிற பெயரில் டிக் டாக் செய்து பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா. இவர் அடிக்கடி ஆபாசமாக பேசி யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வீடீயோ வெளியிட்டு வந்துள்ளார். ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் பெண்கள் குழு ஒன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நடத்தி வரும் யூடியூப் சேனல் குறித்து ரவுடி பேபி சூர்யா ஆபமாக தகாத முறையில் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவருடைய நண்பர் சிக்கா என்கிற சிக்கந்தரையும் கைது செய்துள்ளனர்.

பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவரது சேனலில் வரும் நிகழ்ச்சி தொடர்பாக ரவுடி பேபி சூர்யா தகாத முறையில் ஆபாசமாக பேசியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் சூர்யாவும், அவரது நண்பரான சிக்கா என்கிற சிக்கந்தரும் அந்த பெண்ணை தகாத முறையில் யூ டியூபில் விமர்சித்துள்ளனர்.

ரவுடி பேபி சூர்யா தன்னை அவதூறாகவும் ஆபாசமாக பேசியது குறித்து அந்த பெண்ணும் அவரது கணவரும் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். கோவை மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில், ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அவதூறாக பேசியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ஜெயதேவி விசாரித்து வந்தார்.

இந்த நிலையில், மதுரை அருகே ரவுடி பேபி சூர்யா மற்றும் நண்பர் சிக்கந்தரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவருடன் அவரது நண்பர் சிக்கா என்கிற சிக்கந்தரையும் போலிசார் கைது செய்துள்ளனர். ஆபாசமாக பேசி அவதூறு செய்த வழக்கில் டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யாவும் அவருடைய நண்பர் சிக்காவும் ஜோடியாக கைது செய்யப்பட்டுள்ளது சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rowdy baby surya sikka arrested

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com