கல்லூரி வளாகத்தில் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்; வீடியோ வைரல்

Rowdy Cuts Birthday Cake By machete: அண்மையில் கோவையில் ரௌடிகள் 2 பேர் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சென்னை அருகே ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் ரௌடி ஒருவர் பட்டாகத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ வைரலாகி உள்ளது.

Man Cuts Birthday Cake By machete, Kattankulathur Tamil Vanan, Anti Social celebrates birthday in Coimbatore, பட்டாகத்தியால் கேக் வெட்டிய நபர், காட்டான்குளத்தூரில் பிறந்தநாள் கொண்டாடிய நபர், birthday video goes viral, A Man celebrate birthday in chennai, kattankulathur
Man Cuts Birthday Cake By machete, Kattankulathur Tamil Vanan, Anti Social celebrates birthday in Coimbatore, பட்டாகத்தியால் கேக் வெட்டிய நபர், காட்டான்குளத்தூரில் பிறந்தநாள் கொண்டாடிய நபர், birthday video goes viral, A Man celebrate birthday in chennai, kattankulathur

A Man Cuts Birthday Cake By machete: சில நாட்களுக்கு முன்பு கோவையில் ஒரு கும்பல் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சென்னை காட்டான்குளத்தூர் அருகே ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் ஒருவர் பட்டாகத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோ பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சென்னை காட்டான்குளத்தூரைச் சேர்ந்தவர் தமிழ்வாணன். இவர் ஒரு அரசியல்கட்சியிலும் இருக்கிறார். இவர் தனது பிறந்த நாளை காட்டான்குளத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் பட்டாகத்தியால் கேக் வெட்டி நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடியிருக்கிறார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.

அந்த வீடியோவில் தமிழ்வாணன் ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் ஒரு பெரிய ரோஜா மாலையை அணிந்துகொண்டு நண்பர்களுடன் நிற்கிறார். அவருக்கு முன்பு ஒரு பைக் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த பைக் சீட்டில் பிறந்தநாள் கேக் வைக்கப்பட்டுள்ளது. அருகில் நிற்கும் அவருடைய நண்பர் ஒரு பட்டாகத்தியை எடுத்து அதை சுத்தம் செய்து கேக் வெட்டுவதற்கு கொடுக்கிறார். தமிழ்வாணன் அந்த கத்தியை வாங்கி கேக் வெட்டுகிறார். இந்த நிகழ்வுக்கு பின்னணியில் இளைஞர்கள் சிலர் நின்று வேடிக்கை பார்த்து செல்கின்றனர்.

தமிழ்வாணன் என்பவர் கல்லூரி வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ பார்ப்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதே போல, சில நாட்களுக்கு முன்பு கோவை சரவணம்பட்டியில் சதீஷ், சுரேந்தர் ஆகிய 2 பேரும் தங்கல் நண்பர்களுடன் பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அது தொடர்பான புகைப்படம், வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சதீஸ், சுரேந்தர் இருவரும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள். இது குறித்து விசாரணை மேற்கொண்ட சரவணம்பட்டி போலீசார் ரௌடிகள் இருவரையும் கைது செய்தனர்.

கடந்த ஆண்டு, சென்னையில் பினு என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து பட்டாகத்தியில் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து போலீசார் பினுவை கைது செய்தனர். அண்மைக் காலமாக சட்ட விரோதமான சம்பவங்களில் ஈடுபட்டு வழக்கு நிலுவையில் உள்ள நபர்கள் தங்கள் பிறந்த நாளை நண்பர்களுடன் சேர்ந்து பட்டாகத்தியில் கேக் வெட்டி கொண்டாடும் கலாச்சாரம் அதிகரித்துவருகிறது. அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகும்போது அதைப் பார்ப்பவர்கள் அச்சத்திற்குள்ளாகின்றனர்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rowdy cuts birthday cake by machete video goes viral

Next Story
News today updates : ‘அரசியல் களத்தில் இருந்து நான் வெளியேறவில்லை’ – தமிழிசை பளீர்Tamil Nadu news today live updates
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com