scorecardresearch

‘என் கை, கால் நல்லா இருக்கு; பாத்துக்கோங்க!’: என்கவுன்டர் பயத்தில் வீடியோ வெளியிட்ட கோவை ரவுடி

கோவையில் நீதிமன்ற வளாகம் பின்புறம் நடைபெற்ற கொலை சம்பவத்தை தொடர்ந்து ரவுடிகளுக்கு எதிராக தீவிர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

ரவுடி வெளியிட்ட வீடியோ
ரவுடி வெளியிட்ட வீடியோ

கோவையில் நீதிமன்ற வளாகம் பின்புறம் நடைபெற்ற  கொலை சம்பவத்தை தொடர்ந்து  ரவுடிகளுக்கு எதிராக தீவிர்  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

ரவுடிகளுக்கு எதிரான நவடிக்கை என்ற பெயரில் 80க்கும் மேற்பட்ட  ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். ’பிராகா பிரதர்ஸ்’ மற்றும் ’ ரத்தினபுர பிளட்ஸ்’ஆகிய பெயரில் இரண்டு குழுக்கள்  பகையை வளர்த்து வந்தது தெரிய வந்தது. ’பிராகா பிரதர்ஸ்’ என்ற குழுவைச் சேர்ந்த கௌதம் என்பவர் தன்னை காவல்துறையினர்  என்கவுண்டர் செய்யபோவதாக  கூறி  இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு சென்னை நீதிமன்றத்தில்  சரணடைந்தார்.

கௌதமின் கூட்டாளிகள் தலைமறைவாகினர். இவர்களை  பிடிக்க பெங்களூரு சென்ற தனிப்படை  மக்கள் நடமாட்டம் மிக்க பகுதிகளில் நேற்று  4 ரவுடிகளை விரட்டி பிடித்தனர். சுஜி மோகன், பிரசாந்த், அமர்,  பிரவீன் ஆகிய 4 பேரை கைது தனிப்படை கைது செய்தனர்.

போலீசார் துரத்திய போது தப்பி ஓடிய அமர் என்ற ரவுடி, காவல்துறை விரட்டுவதாகவும் என் கை கால்கள் நன்றாக உள்ளது, என்னை விரட்டுகிறார்கள் என்று கூறி வீடியோ வெளியிட்டு உள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Rowdy released video as he would be shot dead on encounter

Best of Express