சென்னை புழல் சிறையில் ரவுடிகளுக்கு இடையே ஏற்ப்பட்ட கோஷ்டி மோதலில் பிரபல ரவுடி ‘பாக்ஸர்’ முரளி கழுத்து அறுத்து கோடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
வியாசர்பாடியைச் சேர்ந்த பிரபல ரவுடி பாஸ்கர் முரளி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.முரளி மீது 3 கொலை வழக்கு உட்பட, திருட்டு, அடிதடி என 16 வழக்குகள் நிலுவையில் உள்ளன. முரளியின் எதிர் கோஷ்டியான ரவுடி நாகேந்திரனின் கூட்டாளிகளும் புழல் சிறையில் விசாரணை கைதிகள் பிரிவில் இருந்துள்ளன.
கடந்த சில தினங்களாக முரளிக்கும், அவனின் எதிரியான நாகேந்திரனின் கூட்டாளிகளுடன் அடிக்கடி சண்டை மற்றும் வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை சண்ட முற்றி அடிதடி வரை சென்றுள்ளது. நாகேந்திரன் கோஷ்டியைச் சேர்ந்த கைதிகள் ஆயுதங்களை பயன்படுத்தும் அளவிற்கு சென்றுள்ளனர். சிறையில் வழங்கப்படும் அலுமினியத் தட்டையை அவர்கள் உடைத்து ஆயுதமாக பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த கொலைவெறி தாக்குதலில் ரவுடி பாஸ்கர் முரளி சிறையிலியே கழுத்து அறுக்கப்பட்டுள்ளார். பிற கைதிகளின் சத்ததைக் கேட்டு ஓடி வந்த சிறைக்காவலர்கள் முரளிக்கு முதலுதவி தர முயற்சித்துள்ளனர். ஆனால் அதற்குள் முரளி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். ரவுடி முரளியை கொடூரமாக தாக்கிக் கொன்ற சரண், கார்த்திக், ரமேஷ், ஜோயல், பிரதீப் ஆகிய 5 பேரையும் புழல் போலீசார் கைது செய்துள்ளனர்.
புழல் சிறையில் நடந்த இந்த சம்பவம் குறித்து சிறைத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா நேரடியாக வந்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. வெளியில் தவறு செய்தி விட்டு தண்டனையை அனுபவிக்க சென்ற இடத்திலும் ரவுடிகள் இதுப் போன்ற செயல்களில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரட்ர்ஹ்தில் சிறையில் கைதிகளுக்கு இடையே கலவரம் நடக்கும் வரை சிறைத்துறை அதிகாரிகல் என்ன செய்து கொண்டிருந்தனர்? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. ஒரே செல்களில் கைதிகள் கூட்டாக அடைக்கப்பட்டிருப்பதும், இது போன்ற கொலைகளுக்கு காரணமாக அமைய வாய்ப்புள்ளதாக மற்ற சிறை கைதிகள் தெரிவித்துள்ளனர்.