தமிழக இளைஞர்களுக்கு தீபாவளி பரிசு.. கோவையில் மத்திய அமைச்சர் பேச்சு
இந்நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி சரஸ்வதி, கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், இந்திய ரயில்வே துறை, அஞ்சல் துறை மற்றும் பல்வேறு வங்கிகளை சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு பணி வழங்கும் Rozgar Mela - வேலைவாய்ப்பு விழா தொடக்கத்தின் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 75 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குதல் நிகழ்ச்சி இன்று (அக்.22) நடைபெற்றது.
Advertisment
இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் மத்திய சமூகநீதித்துறை மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கி 103 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார்.
ஆன்லைனில் ஒளிபரப்பப்பட்ட வேலை வாய்ப்பு விழா
இந்நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி சரஸ்வதி, கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், இந்திய ரயில்வே துறை, அஞ்சல் துறை மற்றும் பல்வேறு வங்கிகளை சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Advertisment
Advertisements
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர், தமிழக இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக பாரத பிரதமர் அவர்கள் மத்திய அரசின் கீழ் இயங்கும் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புக்கான பணி ஆணைகளை வழங்கி மகிழ்வித்துள்ளதாக தெரிவித்தார்
மேலும், 75 ஆவது சுதந்திர பொன்விழா ஆண்டினை கொண்டாடும் சூழலில் 75 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வந்த நிலையில் தற்போது ஸ்டார்ட் அப் திட்டம், முத்ரா கடன் உதவி திட்டம், மேக் இன் இந்தியா திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் மூலம் அனைத்து பொருட்களும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது” என்றார்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil