மதுரை திருமங்கல் கப்பலூர் டோல்கேட்டை அப்புறப்படுத்தக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் இன்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது.
கப்பலூர் டோல்கேட் போராட்டம்
இந்த டோல்கேட் காரணமாக இப்பகுதியில் ஆம்புலன்ஸ் செல்வதிலும் சிரமம் உள்ளது எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜூலை 1ஆம் தேதி திருமங்கலம் பகுதி உள்ளூர் மக்களும் மற்ற வாகன ஓட்டிகள் போல் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதனால் உள்ளூர் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். இதனால், பேருந்துகள் மாற்றுவழிப்பாதையாக திருப்பி அனுப்பப்பட்டன. டோல்கேட் பகுதிக்கு வாகனங்கள் செல்லாமல் திருப்பி அனுப்பப்பட்டன.
இநநிலையில் ஆர்.பி உதயகுமார் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் கைதுசெய்யப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு?
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “கப்பலூர் சுங்கசாவடியை அகற்ற வேண்டும்; உள்ளூர் மக்களுக்கு பாதி கட்டணம் வசூலிக்க வேண்டும் என அமைதியான முறையில் போராடிய அ.தி.மு.க.வினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்” என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மேலும், “2024ஆம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கை பக்கம் 27ல் டோல்கேட்கள் அகற்றப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. அது என்ன ஆனது? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“