ஆர்.பி. உதயகுமார் மதுரையில் திங்கள்கிழமை (ஜூன் 19) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஜல்லிக்கட்டு கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிமுகவை ஏதேதோ பேசியுள்ளார்.
அவருக்கு உண்மை தெரியுமா? தெரியாதா என்று தெரியவில்லை. தாத்தா, தந்தை பெயரை கூறி புறவாசல் வழியாக அரசியலுக்குள் நுழைந்தவர் அவர்.
எங்களை அடிமை என்கிறார்கள். கோ பேக் மோடி என்று சொல்விட்டு கம்பேக் மோடி, வெல்கம் மோடி என்று கூறியது யார்? பேரறிஞர் அண்ணாவுக்கு எம்.ஜி.ஆர். உறுதுணையாக இருந்தார்.
அவர் இயக்கம் தொடங்கிய பின்பு, உதயநிதி தாத்தாவால் கோட்டை பக்கம் வரமுடியவில்லை. ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை கோட்டை பக்கம் பார்வையாளராகதான் உதயநிதி வந்தார்” எனக் கூறினார்.
தொடர்ந்து, “செந்தில் பாலாஜியை பார்க்க அனைவரும் சென்றார்கள். ஆனால் தன்மானமிக்க ஒரே அமைச்சராக பி.டி.ஆர். தியாகராஜன் செல்லவில்லை.
ரூ.30,000 கோடியை உதயநிதியும், சபரீசனும் எங்கே வைப்பது என்பது தெரியாமல் தடுமாறுகின்றனர் என்று பிடிஆர் சொன்னார். இதற்கு உதயநிதி விளக்கம் கொடுப்பாரா? என்று கேட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“