கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாகவும், நிதியுதவியை வீடுகளுக்கு சென்று வழங்க கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது விசாரணைக்கு வரவுள்ளது.
Advertisment
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜேஷ் இவர், தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில்,
‘கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 21 நாள் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வேலையின்றி பொதுமக்கள் பலர் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதால்,
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 1000 ரூபாய் நிதி உதவியும், அரிசி,
பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இதற்காக தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ‘டோக்கன்’ வழங்கப்படுகிறது. இதை பெற பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக ரேஷன் கடைகளுக்கு செல்கின்றனர். வைரஸ் பரவுவதை தடுக்க இடைவெளி விட்டு நிற்க வேண்டும் என்ற பொது விதியை பொதுமக்கள் பின்பற்றுவது இல்லை.
இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் பாதித்த நபர் யாராவது ஒருவர் நின்றால் கூட, பிறருக்கு அது பரவி விடும் அபாயம் உள்ளது. எனவே, நிதியுதவி தொகையையும், ரேஷன் பொருட்களையும் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil