Magalir Urimai Thogai : மகளிர் உரிமைத் தொகை ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வரவு வைக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி, தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ. 1,000 வழங்கும் திட்டமாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.
இதையடுத்து, தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது. அதே நேரத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து, மகளிர் உரிமை தொகை வராதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு மேல்முறையீடு செய்ய பலரும் இணையதளத்தை ஒரே நேரத்தில் அணுகியதால், இணையதளம் முடங்கியதால் விண்ணப்பதாரர்கள் தவித்தனர்.
இதைத் தொடர்ந்து, அந்தப் பிரச்னையும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் அடுத்த மாதம் பிறந்துவிட்டால் மகளிர் உரிமைத் தொகை எப்போது கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு பெண்கள் இடையே ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆக அக்டோபர் மாத மகளிர் உரிமைத் தொகை இன்னும் 13 நாள்களில் கிடைத்துவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“