தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. செப்.15-ம் தேதி இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அரசு வழங்கிய பட்டியல் படி தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சுமார் 1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பேர் இந்த திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், 50 லட்சத்திற்கும் அதிகமான நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களில் தகுதியான நபர்கள் மேல்முறையீடு செய்யலாம் என அரசு அறிவித்தது. அதன் படி 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். இவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பபட்ட நிலையில் இன்று முதல் அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கி உள்ளது.
இதில், விண்ணப்பம் ஏற்கப்படும் நபர்களுக்கு நவம்பர் 10-ம் தேதிக்கு பிறகு ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. விண்ணணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் குறுஞ்செய்திகள் அனுப்பபட்டு வருகிறது.
மேல்முறையீட்டில் தகுதியானவர்களுக்கான ரூ.1000 வழங்கும் திட்டத்தை மரக்காணத்தில் முதல்வர் ஸ்டாலின் 10-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“