பொதுவெளியில் எச்சில் துப்பினால்? எச்சரிக்கும் தமிழக அரசு!

இருக்கும் பொருளாதார சிக்கல்களில் விதிமுறைகளை பின்பற்றாமல் மேலும் கூடுதல் செலவுகளை தலையில் ஏற்றிக் கொள்ளாதீர்கள்.

இருக்கும் பொருளாதார சிக்கல்களில் விதிமுறைகளை பின்பற்றாமல் மேலும் கூடுதல் செலவுகளை தலையில் ஏற்றிக் கொள்ளாதீர்கள்.

author-image
WebDesk
New Update
Rs. 500 fine for spitting on public place - government's new announcements

Rs. 500 fine for spitting on public place - government's new announcements :  கொரோனா வைரஸ் ஊரடங்கும் அதற்கு பின்னான தளர்வுகளும் மக்களுக்கு நிறைய நல்லதை புரிய வைத்துள்ளது. சுத்தமாக இருத்தலே ஆரோக்கியமாக இருப்பதற்கான வழி என்று நாம் கண்டறிய  இந்த கொரோனா தேவையாக இருக்கிறது. வீட்டை விட்டு வெளியே சென்று மறுபடியும் வீட்டிற்குள் வந்தால் கைகளை சுத்தமாக கழுவுங்கள். இது உங்களுக்கு மட்டுமல்ல,  உங்களை சுற்றி இருக்கும் நபர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் பழக்கமாகும்.

Advertisment

ஊரடங்கு தளர்வுகளை அறிமுகம் செய்துள்ளது தமிழக அரசு. நோய் தொற்று மேலும் உத்வேகம் கொள்ளாமல் இருக்க மக்களாகிய நாம் தான் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.  பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. கொரோனாவை தடுக்க இருக்கும் நடவடிக்கைகள் அனைத்தையும், அதில் இணைத்து, முறையாக அந்த நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்பதையும் உறுதி செய்துள்ளது. இந்த அவசர சட்டத்திருத்தத்திற்கு பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் கொடுத்துள்ளார்.

அதன்படி

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ. 500 அபராதம்

Advertisment
Advertisements

தனிப்படுத்தப்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளை மீறினால் ரூ. 500 அபராதம்

மாஸ்க் அணியாவிட்டால் ரூ. 200 அபராதம்

தனிமனித இடைவெளியை பின்பற்றாவிட்டால் ரூ. 500 அபராதம்

கொரோனா விதிமுறைகளை மீறும் ஜிம், சலூன், ஸ்பா நிலையங்களுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பலருக்கும் வேலை இல்லாத நிலை இருக்கும், சிலருக்கு சம்பள பணம் பிடித்தம் செய்யப்பட்டிருக்கும்.  அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதே பெரும் பாடாக இருக்கும். இது  அனைவருக்குமான நிலை தான். இந்த சிக்கல்களில் விதிமுறைகளை பின்பற்றாமல் மேலும் கூடுதல் செலவுகளை தலையில் ஏற்றிக் கொள்ளாதீர்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: