சென்னையில் போக்குவரத்து இன்னல் ஒவ்வொருநாளும் அதிகரித்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.
இதில், சாலைவிதி மீறல்கள் ஏராளமாக நடப்பதால், போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் அதிகரிக்கிறது.
இதற்கு முற்று புள்ளி வைப்பதற்காக, சென்னை போக்குவரத்து துறை அதிரடியாக பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
கடந்த ஆண்டு சாலை விதிகளை மீறும் ஒவ்வொரு குற்றங்களுக்கும் ஒழுக்கப்பட்டுள்ள அபராதத்தில் திருத்தும் மேற்கொள்ளப்பட்டு, பல மடங்காக மாற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு, வாகனங்களில் நம்பர் பிளேட் விதிமீறலில் ஈடுபட்டவர்களை பிடிப்பதில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தனர் போக்குவரத்து காவல்துறை.
தற்போது போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்பொழுது, ஸ்டாப்லைன் கோட்டைத்தாண்டி நிறுத்தினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்காக, சென்னையில் 287 இடங்களில் விழிப்புணர்வு கூடங்கள் காவல்துறையால் நடத்தப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil