/tamil-ie/media/media_files/uploads/2023/05/New-Project1.jpg)
RS 6 lakh worth Gutka seized in trichy
பெங்களூரிலிருந்து திருச்சி சமயபுரம் பகுதிக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வருவதாக மாவட்ட பொருளாதர குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் (லால்குடி பொறுப்பு) சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன், உதவி காவல் ஆய்வாளர்கள் ராஜசேகர், முத்துசாமி, முதல் நிலை காவலர் செயலரசு, காவலர்கள் தமிழரசன், பாண்டியராஜன், பிரேம் ஆனந்த் உள்ளிட்டோர் சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த மூன்று கார்களை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் 35 மூட்டைகளில் ஒரு டன் எடையுள்ள ரூ.6 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து காரில் இருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், சமயபுரம் அருகே புதூர் உத்தமனூர் நடுத்தெருவைச் சேர்ந்த இளையராஜா(41), தச்சங்குறிச்சியைச் சேர்ந்த மணிராஜ்(34), ராஜஸ்தான் மாநிலம் ஜோலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மஹிபால்சிங் (36), கர்நாடக மாநிலம் பெங்களூர் மகடி ரோட்டைச் சேர்ந்த அமீர் சிங்(38) ஆகியோர் குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
பின்னர் காவல் நிலையத்திற்க்கு அழைத்துச் சென்ற சமயபுரம் போலீசார் அவர்கள் 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் கடத்தி வரப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்புள்ள ஒரு டன் குட்கா பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவ்வாறு கடத்தி வரப்படும் குட்கா பொருட்களை சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் இளையராஜா நடத்திவரும் டீக்கடையில் வைத்து பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதில் மணிராஜ் மீது ஏற்கனவே சிறுகனூர் காவல் நிலையத்தில் குட்கா கடத்தியதாக வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.