மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. வரலாறு காணாத மழை பெய்தது. வீடுகளில் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். சிலர் வீடுகள், உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் கடும் சேதம் ஏற்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி தற்போது மெல்லத் திரும்பி வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் அரசு ரூ. 6000 வெள்ள நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என நேற்று (டிச.9) முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேஷன் கடை மூலம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவித்தார். இந்நிலையில் சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண பொருட்களை இன்று (டிச.10) வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரண தொகை ஒரு வாரத்திற்குள் வழங்கப்படும்.
ரேஷன் கடைகள் மூலம் டோக்கன் வழங்கி நிவாரணத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“