Advertisment

70 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் டாடா; அதானி குழும முதலீடு எவ்வளவு? முழு விவரம் இதோ!

“சென்னையில் இரண்டு நாள்கள் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு உள்ளது” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Top 10 companies that signed on the first day of Chennai Global Investors Conference

சென்னை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.6,64,180 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

 global-investors-meet | சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்றும் (ஜன.7,2024) இன்றும் (திங்கள்கிழமை) ‘உலக முதலீட்டாளர் மாநாடு’ பிரம்மாண்ட அளவில் நடைபெற்றது.
இந்த மாநாட்டின் அதிகாரப்பூர்வ பங்குதாரர் நாடுகளாக சிங்கப்பூர், கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கு பெற்றார்கள்.

Advertisment

இந்த மாநாட்டின் நிறைவு விழாவில் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரையில், “நான் முதலமைச்சராக பொறுப்பு ஏற்ற பின்பு இதுவரை 44 தொழில்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டி உள்ளேன்.
27 தொழில்சாலைகளை திறந்துவைத்துள்ளேன். சென்னையில் இரண்டு நாள்கள் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாக ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி முதலீடு கிடைக்க உள்ளது” என்றார்.

இந்த மாநாட்டில் மொத்தம் ₹6,64,180 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதில், தொழில்துறை, வர்த்தகம் ஆகியவற்றில் ₹3,79,809 கோடி முதலீடுகளும், ஆற்றல் துறைகளில் ₹1,35,157 கோடி முதலீடுகளும், சிறு குறு தொழில் நிறுவனங்களில் ₹63,573 கோடி முதலீடுகளும் கிடைத்துள்ளன.
மேலும், “வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறையில் ₹62,939 கோடி முதலீடுகள் வந்துள்ளன. தகவல் தொழில்நுட்பம் (ஐடி) டிஜிட்டல் சேவைகள் துறைகளில் ₹22,130 கோடி முதலீடுகள் வந்துள்ளன.

இதன்மூலம் 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கிறது. மறைமுகமாக 12 லட்சதது 35 ஆயிரத்து 945 பேர் வேலை வாய்ப்பை பெற உள்ளனர்.

இன்றைய டாப் 10 முதலீடுகள்

எண் நிறுவனங்கள் முதலீடு
01 டாடா நிறுவனம் ரூ.70,800 கோடி
02 அதானி குழுமம் ரூ.24500 கோடி
03 சிபிசிஎல் நிறுவனம் ரூ.17 ஆயிரம் கோடி
04 அதானி குழுமம் ரூ.13200 கோடி
05 எல் அண்ட் டி நிறுவனம் ரூ.3500 கோடி
06 ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ரூ.3000 கோடி
07 மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனம் ரூ.2,740 கோடி
08 ஹிந்துஜா குழுமம் ரூ.2500 கோடி
09 ஹைலி குளோரி புட்வேர் ரூ.2302 கோடி
10 ஸ்டெல்லண்டிஸ் குழுமம் ரூ.2 ஆயிரம் கோடி

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Global Investors Meet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment