RS Bharathi DMK: திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டுள்ளார். ஆலந்தூரில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று அதிகாலை சென்ற போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
திமுக இளைஞரணி சார்பில் அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து ஆர்.எஸ் பாரதி பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதோடு நீதிபதிகள் குறித்தும் அவர் பேசியது சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து, ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் குமார் என்பவர் ஆர்.எஸ் பாரதி மீது புகார் அளித்திருந்தார். தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் ஆர்.எஸ் பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான போலீசார், ஆர்.எஸ் பாரதியை இன்று அதிகாலை கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்காக அவரை மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச்சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.பாரதியை ஜாமீனில் எடுப்பதற்காக, தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள், திமுக வழக்கறிஞர் அணியினர்.
இதனை ஆங்கிலத்தில் படிக்க - Rajya Sabha MP RS Bharathi arrested in Chennai
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
DMK Senior Leader RS Bharathi Arrested Updates
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது குறித்த உடனடி தகவல்களை இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
ஆர் எஸ் பாரதி MPயை இடை கால ஜாமீனில் இன்று மாவட்ட நீதிபதி திரு செல்வகுமார் விடுவித்தார். pic.twitter.com/PBuJQnACih
— P. Wilson (பி. வில்சன்) Believe in Yourself. (@PWilsonDMK) May 23, 2020
பழங்குடியின சிறுவனை அவமதித்த திண்டுக்கல் சீனிவாசன் எப்போது கைது செய்யப்படுவார் என திமுக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
பழங்குடியின சிறுவனை அவமதித்த அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் எப்போது கைது செய்யப்படுவார்? அதிமுக ஆட்சியில் அதிமுகவுக்கு ஒரு சட்டம் – பொதுமக்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் வேறு சட்டமா?#RSBharathi pic.twitter.com/oXAYBQHIek
— #DMK4TN (@DMK4TN) May 23, 2020
பொய் வழக்கு, சட்ட விரோத கைதுகள் குறித்து ஆலோசிக்க
நாளை காலை @mkstalin தலைமையில் திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலர்கள் கூட்டம்.#DMK pic.twitter.com/1ezqfCz6J4— Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் (@Priyan_reports) May 23, 2020
“எங்கள் தலைவர் தளபதி @mkstalin இருக்கிறார் – திமுக எனும் மாபெரும் பேரியக்கம் இருக்கிறது - எனவே, கைது பற்றிய கவலையின்றி அதிமுக ஆட்சியின் ஊழல்களை மக்கள் மத்தியில் இன்னும் வேகமாக கொண்டு செல்வோம்”
-திமுக அமைப்புச் செயலாளர் திரு. @RSBharathiDMK MP அவர்கள்.#RSBharathi pic.twitter.com/NJWqK1Z40S
— #DMK4TN (@DMK4TN) May 23, 2020
கொரோனா நோய்த் தடுப்பில் தோல்வியைத் திசை திருப்ப தன் மீது ஊழல் புகார் அளித்த @RSBharathiDMK யின் மீதான பழைய புகாரைத் தட்டி எடுத்து கைது செய்துள்ளார் @CMOTamilNadu. எடப்பாடி போன்ற டெல்லி எடுபிடிகளின் சலசலப்புகள் கண்டு தி.மு.கவும் அஞ்சாது. அது தமிழக மக்களையும் திசை திருப்பாது. pic.twitter.com/rBM9G6eroc
— M.K.Stalin (@mkstalin) May 23, 2020
திமுக அமைப்பு செயலாளர் அண்ணன் #RSBharathi கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். கோவையில் கொரோனா தடுப்பு உபகரணங்கள் வாங்கியதில் ரூ.200 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது பற்றி நேற்று ஆர்.எஸ்.பாரதி அவர்கள் புகார் அளித்திருந்த நிலையில், இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார். 1/2
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) May 23, 2020
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது !!!
* நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக வந்த புகார்களின் மீது நடவடிக்கை
* தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!!
இனியாவது திருந்துவார்களா திமுகவினர்? pic.twitter.com/8azIE7nErq
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) May 23, 2020
இப்போது அதுமட்டுமல்ல இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்குப் போட்டு அந்த வழக்கு அரசு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதின் பேரில் 27 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்தகட்டத்தில் இப்போது என்னை கைது செய்ய வருகிறார்கள். இன்னொரு மனு இந்த எப்.ஐ.ஆரை ஸ்குவாஷ் செய்ய போடப்பட்டு உள்ளது. அதுவும் நிலுவையில் உள்ளது, இப்படி இரண்டு நிலையில் இருக்கும் போது, அவசரவசரமாக கொரோனாவை தடுக்க நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக எங்களை போன்றோரை கைது செய்ய துடிக்கிறார்கள் அதைபற்றி கவலை யில்லை, என் தலைவர் கலைஞர் 77 வது வயதில் கைது செய்யப்பட்ட நிலையில் நான் 71 வயதில் கைது செய்யப்படுகிறேன்
நேற்று மாலை எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் மீதும் நான் ஒரு புகார் மனுவை விஜிலன்ஸ் டிபார்ட்மென்ட் இடம் கொடுத்தேன். இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு என்னை கைது செய்கிறார்கள். உங்கள் மூலமாக எடப்பாடிக்கு தெரிவித்துக் கொள்வது,இந்த குறைந்த நேரத்தில் கோயம்புத்தூர் நகராட்சியில் ஏறத்தாழ 200 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது, 27 ரூபாய்க்கு வாங்கவேண்டிய வேப்ப எண்ணையை பல மடங்கு உயர்வு கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். இதையெல்லாம் வைத்துள்ளேன் இப்படிப்பட்ட ஊழல் புகார்களை கொடுக்கின்ற காரணத்தினால், என்னை கைது செய்ய வேண்டும் என்று எடப்பாடி மற்றும் வேலுமணி தூண்டி விட்டு என் மீது வழக்குப் போட சொல்லி இருக்கிறார்கள்.
பிப்ரவரி 15 ஆம் தேதி அன்பகத்தில் அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நான் பேசியதாக செய்திகள் வெளியிடப்பட்டு அதற்கு அடுத்த நாளே அதற்கு மன்னிப்பு விளக்கமும் மறுப்பும் வருத்தமும் தெரிவித்துவிட்டேன். இது நடைபெற்று இது நடந்து ஏறத்தாழ 100 நாட்கள் ஆகிவிட்டது. அதாவது ஒரு கொரோனா வருவதற்கு முன்பாக பேசினேன். ஆனால் கொரோனா இன்றைக்கு சென்னையில் உச்சகட்டத்தில் உள்ளது. 8 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர், இந்த நிலையில் என்னை கைது செய்து சிறையில் வைக்க இந்த அரசு முடிவு செய்துள்ளது. எனக்கு 71 வயதாகிறது நான் டயாப்படிஸ் பேஷண்ட், ஹைபர்தென்ஷன் பேஷண்ட் இதை நான் எழுத்து பூர்வமாக வந்திருந்த காவல்துறை அதிகாரியிடம் தெரிவித்து உள்ளேன். அதுதான் நீதிமன்றத்திலும் சொல்ல உள்ளேன். சிறைச்சாலைக்கு நான் பயந்தவன் அல்ல.நான் மிசா காலத்தில் ஜெயிலில் இருந்தவன், கலைஞருடன் பலமுறை ஜெயிலில் இருந்தவன்.ஜெயில் என்பது புதிதல்ல.
தனக்கு கொரானா பரிசோதனை செய்ய வேண்டும் என எழும்பூர் நீதிமன்ற நீதிபதியிடம் ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை விடுத்துள்ளார். “எனது மகன் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். ”எனக்கு இருமல் , சளி இருக்கிறது , எனவே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்” என ஆர்.எஸ்.பாரதி கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
'அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இன்று அதிகாலை ஆர்.எஸ்.பாரதி MP அவர்களை கைது செய்தது கண்டனத்திற்குரியது' என ஜெ.அன்பழகன் ட்வீட் செய்துள்ளார்.
கொரோனா மிக வேகமாக பரவிக் கிடக்கும் சூழ்நிலையில், தனது அரசியல் எதிரிகளை பழிவாங்கும் நோக்கில் அரசு செயல்படுகிறது. எடப்பாடி அரசை இதிலிருந்தே மக்கள் புரிந்துக் கொள்ளலாம்.
அரசியல் காழ்ப்புணர்சியின் காரணமாக இன்று அதிகாலை ஆர்.எஸ்.பாரதி MP அவர்களை கைது செய்தது கண்டனத்திற்குரியது.
— J Anbazhagan (@JAnbazhagan) May 23, 2020
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியை கைது செய்து காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. ஆணையர் அலுவலகத்துக்குள் செல்ல திமுக வழக்கறிஞர்கள் முயற்சி செய்தனர். தடுத்து நிறுத்திய போலீசாருடன், திமுக வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டிருப்பதை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வரவேற்றுள்ளார்.
திமுக அமைப்பு செயளாலர் ஆர்.எஸ்.பாரதி கைது. வரவேற்கத்தக்கது. அடுத்து தயாநிதிமாறன் in Waiting list?. @polimernews @ThanthiTV @PTTVOnlineNews @sunnewstamil @news7tamil @News18TamilNadu
— H Raja (@HRajaBJP) May 23, 2020
கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதி, “நேற்று தான் ஓ.பி.எஸ்ஸின் ஊழல் குறித்து புகார் அளித்தேன். இப்போது கூட கோயம்புத்தூரில் கிருமி நாசினியில் ஊழல் செய்த எஸ்.பி.வேலுமணி குறித்து புகார் மனு தயாரித்து வருகிறேன். இப்போது நான் கைது செய்யப்படுவதால் எந்தக் கவலையும் இல்லை. நான் உள்ளே இருந்தாலும், வழக்குப் போடுவதற்கான வேலைகள் தடையில்லாமல் நடைபெறும்” என்றார்
'திமுக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி MP அவர்கள் கைது!'
கொரோனா ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி ஊழல்செய்த துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது நேற்று புகாரளித்து -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது புகார்மனு தயாரித்த நிலையில், 100 நாட்கள் முன்பு பேசிய விவகாரத்தில் அதிகாலையில் கைது. pic.twitter.com/X8ChsgJIzV
— DMK (@arivalayam) May 23, 2020
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights