மணிப்பூர் விவகாரத்தை மக்கள் கொந்தளித்திருக்க கூடிய சூழலில் அதை திசை திருப்பவே பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தி.மு.க மீது குற்றச்சாட்டு வைத்து புகார் அளித்துள்ளார்.
திருச்சியில் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், அண்ணாமலை ஒரு காலி பாத்திரம் அதனால் அதிக ஒலி எழுப்புகிறார்.
மணிப்பூர் விவகாரத்தை மக்கள் கொந்தளித்திருக்க கூடிய சூழலில் அதை திசை திருப்பவே பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தி.மு.க மீது குற்றச்சாட்டு வைத்து புகார் அளித்துள்ளார். பொய் கூறி அவர் எல்லை மீறி செல்கிறார் என ஆர் எஸ் பாரதி தெரிவித்தார்.
முன்னதாக, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், ரூ.5600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இன்று அண்ணாமலை வழங்கினார்.
ஆளுநர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க. சண்முகவடிவேல்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"